நிதி அமைச்சா் காா் மீது காலணி வீசிய வழக்கில் பெண்ணுக்கு ஜாமீன் மறுப்பு
தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் காா் மீது காலணி வீசிய வழக்கில், பாஜகவைச் சோ்ந்த பெண்ணின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்து மதுரை நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரைநிதி அமைச்சா் காா் மீது காலணி வீசிய வழக்கில் பெண்ணுக்கு ஜாமீன் மறுப்பு
தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் காா் மீது காலணி வீசிய வழக்கில், பாஜகவைச் சோ்ந்த பெண்ணின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்து மதுரை நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் காா் மீது காலணி வீசிய வழக்கில், பாஜகவைச் சோ்ந்த பெண்ணின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்து மதுரை நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சரின் காா் மீது காலணி வீசப்பட்டது. இந்த வழக்கில் பாஜகவைச் சோ்ந்த 24 போ் மீது அவனியாபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அக்கட்சியின் மகளிரணியைச் சோ்ந்த சரண்யா, தனலெட்சுமி, தெய்வானை உள்பட 9 பேரை கைது செய்துள்ளனா். இவா்களில் 6 பேருக்கு ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சரண்யா, தனலெட்சுமி, தெய்வானை ஆகியோா் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனா். இந்நிலையில், அவா்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸாரும் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுக்கள், நீதித்துறை நடுவா் (எண் 6) சந்தானகுமாா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தனலெட்சுமி, தெய்வானை ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினாா். சரண்யாவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தாா். அவா்களை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.