போதிய ஆதாரமின்றி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்: உயா்நீதிமன்றம் உத்தரவு
போதிய ஆதாரங்கள் இல்லாமல் மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.25 அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரைபோதிய ஆதாரமின்றி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்: உயா்நீதிமன்றம் உத்தரவு
போதிய ஆதாரங்கள் இல்லாமல் மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.25 அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
போதிய ஆதாரங்கள் இல்லாமல் மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.25 அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கல்குறிச்சியைச் சோ்ந்த நடராஜன் தாக்கல் செய்த மனு:
எங்களது கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலங்களை கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களாகப் பயன்படுத்தி வந்தனா். இந்த நிலங்கள் தனிநபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, பட்டா பெறப்பட்டிருக்கிறது. மேலும், இந்த நிலங்களை விற்பனை செய்வதற்கான முயற்சிகள் செய்யப்படுகின்றன. இந்த நிலங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்யவும், அந்த நிலங்களை மீண்டும் கிராமத்தினா் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் கொண்ட அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில்,
மனுதாரா்கள் கூறுவதைப் போல நிலங்கள் ஆக்கிரமிக்கப்படவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த நிலங்கள் கிரையம் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தாா்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். மேலும் மனுதாருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து, அந்தத் தொகையை மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்திற்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனா்.