உசிலம்பட்டி அருகே இடி விழுந்து உயிரிழந்த மாடு. 
மதுரை

உசிலம்பட்டி அருகே இடி விழுந்து இரண்டு மாடுகள் உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வலையபட்டி கிராமத்தில் மழையின்போது இடி விழுந்ததில் இரண்டு மாடுகள் உயிரிழந்தன.

DIN

உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வலையபட்டி கிராமத்தில் மழையின்போது இடி விழுந்ததில் இரண்டு மாடுகள் உயிரிழந்தன.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. அதேபோல் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வலையபட்டி பகுதியிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. 

இந்த நிலையில் வலையபட்டியைச் சேர்ந்த ஆதி முத்து மகன் காசி தங்களுக்கு சொந்தமான இரண்டு மாடுகளை மேய்ச்சலுக்காக ஆற்றுப் பகுதியில் கட்டி வைத்திருந்தார். அப்போது இடி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 2 மாடுகளும் உயிரிழந்தன.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

மாட்டு உரிமையாளர் காசி இறந்த மாட்டின் மதிப்பு ரூ.2 லட்சம் என தெரிவித்தார். மேலும், தமிழக அரசு இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

SCROLL FOR NEXT