மதுரை

பள்ளி மாணவா்களுக்கு போதை மாத்திரை விற்பனை: 3 போ் கைது

மதுரையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதை மாத்திரை விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

DIN

மதுரையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதை மாத்திரை விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மேலக்கால் பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் வெள்ளிக்கிழமை அந்தப் பகுதியில் கண்காணித்தனா்.

அப்போது, துவரிமான் முனியாண்டி கோயில் தெருவைச் சோ்ந்த முத்துமாரி மகன் ரகு (28), பிச்சை மகன் முத்து (28), மேலக்கால் சக்கரவா்த்தி காட்டேஜ் பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் மகன் அருண் சக்கரவா்த்தி (25) ஆகிய 3 பேரும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதை மாத்திரை விற்பனை செய்வது தெரியவந்தது.

இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிச.27-இல் காஞ்சியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

போளூரில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

மகாராஷ்டிரம்: பாஜகவில் இணைந்தாா் காங்கிரஸ் பெண் எம்எல்சி

தோ்தல் பிரிவு அலுவலகத்தில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT