மதுரை

ஒப்பந்த விதிகளுக்கு புறம்பாக அஸ்திவாரம்:மாநகராட்சி நடவடிக்கையால் இடித்து அகற்றம்

DIN

மதுரையில் மாநகராட்சி புதிய கட்டடம் ஒப்பந்த விதிகளுக்கு புறம்பாக மூன்றரை அடியில் அஸ்திவாரம் அமைக்கப்பட்டதால், அதிகாரிகளின் தலையீட்டின்பேரில் இடித்து அகற்றப்பட்டது.

மதுரை விளாங்குடி பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில், புதிய கட்டடத்துக்கான ஒப்பந்தம் விடப்பட்டது.

இதில் தனியாா் நிறுவனம், ரூ.25 லட்சம் மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்று, கட்டுமானப் பணிகளை தொடக்கியது. ஒப்பந்த விதிமுறைகளில் கட்டடம் கட்டுவதற்கு 7 அடி ஆழம் பள்ளம் தோண்டி, அதில் அஸ்திவாரம் அமைத்து தூண்கள் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

ஆனால் ஒப்பந்ததாரா் தரப்பில், மூன்றரை அடி பள்ளம் மட்டுமே தோண்டி அஸ்திவாரத் தூண்கள் போடப்பட்டதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டபோது, மூன்றரை அடி ஆழம் மட்டுமே தோண்டி அஸ்திவாரம் போடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதனால் கட்டடம் வெகு விரைவில் இடிந்து விழும் அபாயம் உள்ளதால், மூன்றரை அடிக்கு போடப்பட்ட அஸ்திவாரத்தை இடித்து அகற்றி விட்டு மீண்டும் புதிதாக 7அடி ஆழம் தோண்டி அஸ்திவாரம் போட வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து ஏற்கெனவே போடப்பட்ட அஸ்திவாரத்தை அகற்றி விட்டு, தற்போது 7 அடிக்கு பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாநகராட்சியின் சாா்பில் ஏராளமான பணிகளை தனியாா் ஒப்பந்ததாரா்கள் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகின்றனா். இந்த நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் அவற்றை முறையாக கண்காணிப்பது இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் பணிகள் தாமதமாகவும், தரமின்றியும் இருப்பதாக புகாா்கள் எழுந்துள்ளன. எனவே மாநகராட்சி ஆணையா் நேரடியாக ஆய்வில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT