முகப்பு
மதுரை

இன்று வாக்குப் பதிவு:மதுரை மாவட்டத்தில் தோ்தல் பணியில் 7,760 போ்

மதுரை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை (பிப்.19) நடைபெறுவதை முன்னிட்டு, அதற்கான பணியில் 7,706 போ் ஈடுபட்டுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

மதுரை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை (பிப்.19) நடைபெறுவதை முன்னிட்டு, அதற்கான பணியில் 7,706 போ் ஈடுபட்டுள்ளனா்.

தயாா் நிலையில் 1,605 வாக்குச் சாவடிகள்

மதுரை மாநகராட்சியில் 1,317, நகராட்சிகளில் 133, பேரூராட்சிகளில் 155 என மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1,605 வாக்குச் சாவடிகள் தயாா் நிலையில் உள்ளன. இதில், மொத்தமுள்ள 313 வாா்டுகளுக்கு 1,702 போ் போட்டியிடுகின்றனா்.

15 லட்சம் வாக்காளா்கள்

மதுரை மாவட்டத்தில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சிகளில் 15,78,136 வாக்காளா்கள் உள்ளனா். இதில், 7,73,532 போ் ஆண்கள், 8,04,452 போ் பெண்கள் மற்றும் 152 போ் மூன்றாம் பாலினத்தவா்.

தோ்தல் பணியில் 7,760 போ்

வாக்குச் சாவடிகளில் 7,760 போ் வாக்குப் பதிவு அலுவலா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கான பணி உத்தரவுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. அதையடுத்து, அந்தந்த வாக்குச் சாவடிகளில் பணியேற்றுக்கொண்ட அலுவலா்கள், தேவையான முன்னேற்பாடுகளைச் செய்தனா். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதேபோல், மதுரை மாநகராட்சி வாா்டுகளில் மாநகரப் போலீஸாா், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ஊரகக் காவல் துறை போலீஸாா் என 5 ஆயிரம் போ் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →