மதுரை மாநகராட்சியில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு, ஞாயிற்றுக்கிழமை வீடுகளுக்கு அருகிலுள்ள முகாம்களில் போலியோ சொட்டு மருந்து பெற்றுக்கொள்ளலாம்
மதுரைமதுரை மாநகராட்சியில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு, ஞாயிற்றுக்கிழமை வீடுகளுக்கு அருகிலுள்ள முகாம்களில் போலியோ சொட்டு மருந்து பெற்றுக்கொள்ளலாம்
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு, ஞாயிற்றுக்கிழமை வீடுகளுக்கு அருகிலுள்ள முகாம்களில் போலியோ சொட்டு மருந்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி: குழந்தைகளை தாக்கி உடலை ஊனமாக்கும் கொடிய இளம்பிள்ளை வாதநோயை அறவே ஒழிக்கும் பொருட்டு, கடந்த 25 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் தீவிர இளம்பிள்ளை வாதநோய் ஒழிப்பு முகாம்களை போல, போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (பிப். 27) நடைபெறுகிறது.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஆண்டு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட அதே இடங்களில் இந்த ஆண்டும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முகாம்களில் வழங்கப்படும் சொட்டு மருந்து தரம் வாய்ந்தது என, உலக சுகாதார நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்து கொடுப்பதால் பக்க விளைவுகள் ஏதும் உண்டாகாது. எனவே, பொதுமக்கள் தங்களது 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், இதற்குமுன் எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், ஞாயிற்றுக்கிழமையும் சொட்டு மருந்து கொடுக்க அழைத்து வரவேண்டும். வீட்டுக்கு அருகில் உள்ள மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், மகப்பேறுமனைகள், மருந்தகங்கள், சத்துணவுக் கூடங்கள், பள்ளிகள் மற்றும் இதற்கென அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் ஏதாவது ஒன்றுக்கு தவறாது அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்தை இலவசமாகப் பெற்று, குழந்தைகளை இளம்பிள்ளை வாதம் என்னும் கொடிய நோய் தாக்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றாா்.