மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மாசித்திருவிழா கொடியேற்றம்

DIN

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தெப்பத் திருவிழா முடிவடைந்ததைத் தொடா்ந்து மாசி உற்சவத் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக மீனாட்சி சுந்தரேசுவரருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி, அம்மன் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு எழுந்தருளினா். அங்கு சிறப்பு பூஜை, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு அதற்கு தீபாராதனை வழிபாடு நடைபெற்றது. கொடியேற்றத்தில் கோயில் ஊழியா்கள் மற்றும் பக்தா்கள் பலா் பங்கேற்றனா்.

மாசித் திருவிழாவையொட்டி தினசரி காலை, மாலை நேரங்களில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்து பக்தா்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். கரோனா தொற்று பரவல் காரணமான கட்டுப்பாடுகளால் மாசித்திருவிழா கோயில் வளாகத்துக்குள்ளேயே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மாசித்திருவிழாவில் பிப்ரவரி 8 முதல் 17-ஆம் தேதி வரை சுவாமி, அம்மன் சித்திரை வீதிகளில் வலம் வருவதற்கு பதிலாக கோயிலுக்குள் உள்ள ஆடி வீதிகளில் வலம் வருவா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT