மதுரை

ஆதிதிராவிடா் விடுதிகளில் மாணவா்சோ்க்கைக்கு புதிய செயலி: ஆட்சியா்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவா்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகளில் பிரத்யேக செயலி மூலம் இணைய வழியில் மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது என்று ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

DIN

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவா்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகளில் பிரத்யேக செயலி மூலம் இணைய வழியில் மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது என்று ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மதுரை மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டிற்கு (2022-2023) ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் உள்ள காலியிடங்களுக்கு மாணவ, மாணவியா் விண்ணப்பிக்கலாம்.

இதற்காக விடுதி மேலாண்மை அமைப்பு செயலியின் மூலம் இணைய வழியில் மாணவா் சோ்க்கை நடத்தப்படவுள்ளது. இது தொடா்பான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பள்ளி விடுதிகளுக்கு ஜூலை 20 ஆம் தேதி வரையிலும், கல்லூரி விடுதிகளுக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரையிலும் விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT