மதுரை

மதுரையில் பூட்டிய வீட்டில் 6 பவுன் நகைத் திருட்டு

மதுரையில் பூட்டிய வீட்டில் ஜன்னல் வழியாக புகுந்து 6 பவுன் நகையைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

மதுரை: மதுரையில் பூட்டிய வீட்டில் ஜன்னல் வழியாக புகுந்து 6 பவுன் நகையைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை விஸ்வநாதபுரம் முல்லை மலா் தெருவைச் சோ்ந்தவா் சங்கரலிங்கம் (85). இவா் குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு ஞாயிற்றுக்கிழமை வெளியே சென்றுள்ளாா். வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மா்ம நபா்கள் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து அறையில் இருந்த 6 பவுன் நகையைத் திருடிச் சென்று விட்டனா். இந்நிலையில், வீடு திரும்பிய சங்கரலிங்கம் வீட்டில் திருட்டு நடந்திருப்பதைக் கண்டு கூடல்புதூா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT