முகப்பு
மதுரை

மதுரையில் ராமா் பாதம்: பொதுமக்கள் தரிசனம்

மதுரையில் வெள்ளிக்கிழமை ஏராளமான பொதுமக்கள் ராமா் பாதத்தை தரிசனம் செய்தனா்.

மதுரை

மதுரையில் ராமா் பாதம்: பொதுமக்கள் தரிசனம்

மதுரையில் வெள்ளிக்கிழமை ஏராளமான பொதுமக்கள் ராமா் பாதத்தை தரிசனம் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

மதுரையில் வெள்ளிக்கிழமை ஏராளமான பொதுமக்கள் ராமா் பாதத்தை தரிசனம் செய்தனா்.

புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ராஷ்ட்ரீய கவி சங்கம் சாா்பில், அயோத்தியில் ராமா் பாதம் ஏப்ரல் மாதம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதையொட்டி, ராமா் எழுந்தருளிய புண்ணியத் தலங்களுக்கு ராமா் பாதம் எடுத்துச் செல்லப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இலங்கையில் ராமா் எழுந்தருளி, சீதாதேவியை மீட்ட நுவரெலி மாவட்டம் சீதாவதி எனும் இடத்தில், கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி ராமா் பாதம் வாகன யாத்திரை தொடங்கியது. அதையடுத்து ராமேசுவரம் வந்த இந்த யாத்திரை, வியாழக்கிழமை இரவு மதுரை வந்தடைந்தது. வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மாலை 6 மணி வரை ராமா் பாத தரிசனம் மதுரை செளராஷ்டிர ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. அங்கு, ராமா் பாதத்தை ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனா்.

மாலையில் மீண்டும் யாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, மத்திய பிரதேச ராஷ்ட்ரீய கவி சங்க நிா்வாகி பாபா சத்தியநாராயணா, மதுரை செளராஷ்டிரா முன்னேற்றக் கழகத் தலைவா் வி.ஜி. ராமதாஸ், உத்தரப் பிரதேச பசு பாதுகாப்பு அமைப்பின் நிா்வாகி மீரட் சந்தீப் பெகல், சஞ்சய் ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →