மதுரை

உறுதிமொழி ஏற்பில் எந்த அரசியலும் இல்லை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதிஸ் 

DIN

மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற முதலமாண்டு மாணவர்களுக்கான நிகழ்ச்சியில்  சமஸ்கிருத உறுதிமொழி உறுதியேற்பு விவகாரம் தொடர்பாக  மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதிஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதிஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

"நாங்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கவில்லை. ஆங்கிலத்திலயே உறுதிமொழி ஏற்றோம். உறுதிமொழி ஏற்பின்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழி தான் ஏற்கப்பட்டது.

கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து தேசிய மருத்துவக் கல்லூரி இயக்குனரக அறிவிப்பின்படி, தான் ஹிப்போகிரடிக், மகரிஷி சரக் ஷபத் ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு உறுதிமொழி எடுக்கலாம் என்ற அறிவிப்பின்படி, மாணவர் பேரவையினராகவே இணையதளத்தில் உறுதிமொழி எடுத்தோம்.

நேற்றுதான் மாநில அரசு மருத்துவ கல்லூரி இயக்குனரகம் சரக் ஷபத் உறுதிமொழி எடுக்ககூடாது என சுற்றறிக்கை வந்துள்ளது. அவசரத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழி எடுத்துவிட்டோம். தேசிய மருத்துவக் கல்லூரி இயக்குனரகம் 2021 கல்வியாண்டு மாணவர்களுக்கான அறிவிப்பில் இருந்ததன் அடிப்படையில் நாங்களே மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழி எடுத்தோம்.

தேசிய மருத்துவ கல்லூரி இயக்குனரகம் இரு உறுதிமொழிகளில் எதை வேண்டுமானாலும் எடுக்கலாம் என கூறியிருந்த நிலையில் மாணவர் பேரவையினர் நாங்களே சரக் ஷபத் உறுதிமொழி எடுத்தோம். சரக் ஷபத் உறுதிமொழி ஏற்பில் எந்த அரசியலும் இல்லை. உறுதிமொழி ஏற்பு தொடர்பாக நாங்கள் கல்லூரி நிர்வாகம் யாரிடமும் இது குறித்து கேட்காமலயே நாங்களாகவே உறுதிமொழியை இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து உறுதிமொழி ஏற்றோம். மருத்துவக் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட யாருக்கும் இதில் தொடர்பில்லை" என்றார் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT