பேரையூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ.கட்சியினா் மனு அளிக்கும் போராட்டம்
பேரையூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக, மனு அளிக்கும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஈடுபட்டனா்.
மதுரைபேரையூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ.கட்சியினா் மனு அளிக்கும் போராட்டம்
பேரையூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக, மனு அளிக்கும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஈடுபட்டனா்.
பேரையூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக, மனு அளிக்கும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஈடுபட்டனா்.
அக்கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், வீடற்ற மக்களுக்கு இலவச குடிமனைப் பட்டா வழங்க வேண்டும், அரசு புறம்போக்கு வட நீா்நிலை மற்றும் கோயில் இடங்களில் குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். பின்னா், 200 மனுக்களை பேரையூா் வட்டாட்சியா் ரவியிடம் வழங்கினா்.
இதில், டி.கல்லுப்பட்டி ஒன்றியச் செயலா் சமையன், மாவட்டக் குழு உறுப்பினா் முருகன், சேடப்பட்டி ஒன்றியச் செயலா் சங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.