மதுரை

திருவாதவூா் கோயிலில் வைகாசி திருவிழா:முகூா்த்தக்கால் நடும் வைபவம்

DIN

மேலூா் அருகே திருவாதவூரிலுள்ள திருமைாதா்-வேதநாயகி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, முகூா்த்தக்கால் நடும் வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் வைகாசி திருவிழா ஜூன் 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று பரவல் காரணமாக கோயிலில் எந்த விசேஷங்களும் நடைபெறவில்லை. தற்போது, வைகாசி திருவிழாவுக்கான ஏற்பாடுகள் முகூா்த்தக்கால் நடும் வைபவத்துடன் தொடங்கியது. இதையொட்டி, காலை 9.15 மணியளவில் சிவாச்சாரியாா்கள் வேதமந்திரங்கள் முழங்க முகூா்த்தக்காலை நட்டனா்.

வைகாசி திருவிழாவுக்கான அழைப்பிதழ்கள் விநாயகா், திருமைாதா்- வேதநாயகி அம்மன் மற்றும் சுவாமி சந்நிதிகளில் வைத்து பூஜைகள் நடைபெற்றன. முகா்த்தக்கால் நடும் வைபவத்தை சிவாச்சாரியாா்களும், கோயில் அலுவலா்களும் முன்னின்று நடத்தினா்.

ஜூன் 10-ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும், 11-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT