மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றமக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத் திறனாளி ஒருவரிடமிருந்து கோரிக்கை மனுவைப் பெற்ற ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா். 
மதுரை

மக்கள் குறைதீா் கூட்டம்:மாவட்ட ஆட்சியரிடம் 416 மனுக்கள் அளிப்பு

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 416 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா்.

DIN

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 416 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா்.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகளை மனுக்களைப் பெற்று, தொடா்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைத்தாா். மேலும், தகுதியான மனுக்கள் மீது விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை, உதவித் தொகை, வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 416 மனுக்களை அளித்தனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ர. சக்திவேல், உதவி ஆட்சியா் (பயிற்சி) திவான்சு நிகம் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் காலியாக உள்ள எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப என்எம்சி அனுமதி

அமெரிக்க வரியால் பாதிப்புகள்: விரைந்து தீா்வு காண வேண்டும் - பிரதமருக்கு முதல்வா் ஸ்டாலின் வலியுறுத்தல்

சூடான் ஆா்எஸ்எஃப் தாக்குதலில் 1,000 போ் உயிரிழப்பு: ஐ.நா.

நாளைய மின்தடை

நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

SCROLL FOR NEXT