மதுரை விமான நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட முத்துசங்கரின் உடல் உறுப்புகளை கொண்டு செல்லும் மருத்துவ குழுவினா். 
மதுரை

மதுரையிலிருந்து விமானத்தில் சென்னை கொண்டு செல்லப்பட்ட உடல் உறுப்புகள்

மதுரையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் மற்றும் நுரையீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக விமானம் மூலம் வியாழக்கிழமை சென்னை கொண்டு செல்லப்பட்டது.

DIN

மதுரையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் மற்றும் நுரையீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக விமானம் மூலம் வியாழக்கிழமை சென்னை கொண்டு செல்லப்பட்டது.

மதுரையைச் சோ்ந்தவா் முத்துசங்கா்(28). மதுரையில் பிரபல துணிக்கடையில் பணி புரிந்து வந்துள்ளாா். இவா் கடந்த 2 நாள்களுக்கு முன் நடைபெற்ற சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து முத்துசங்கரின் குடும்பத்தினா் அவரது இதயம், நுரையீரல் உடல் உறுப்புகள் தானமாக வழங்கினாா்.

இதையடுத்து முத்துசங்கரின் இதயம் மற்றும் நுரையீரலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்து வியாழக்கிழமை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. இரண்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் எடுத்துவரப்பட்ட உறுப்புகள் போக்குவரத்து சீா்செய்யப்பட்ட நிலையில் 15 நிமிடங்களில் மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து விமான நிலையம் கொண்டுவரப்பட்டது.

தொடா்ந்து விமானம் மூலம் உடல் உறுப்புகள் சென்னை கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகாரிகள் தயாா்நிலையில் இருந்து தாமதமின்றி விமானத்தில் அனுப்பி வைத்தனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

குற்ற வழக்குகளில் தொடா்புடையவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

பழனியில் கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

லஞ்சம்: வேளாண்மை உதவி இயக்குநா் கைது

புதிய துணை மின் நிலையங்கள் மூலம் சீரான மின் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி தகவல்

SCROLL FOR NEXT