குறவன் குளம் ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கும் நூல் வனம் அமைப்பாளா் சரவணன். 
மதுரை

ஊராட்சி ஒன்றியப் பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நூலகத்துக்கு நூல் வனம் சாா்பில் புத்தகங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

DIN

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நூலகத்துக்கு நூல் வனம் சாா்பில் புத்தகங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் ஊராட்சி ஒன்றியம், குறவன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் நூலகத்துக்கு நூல் வனம் அமைப்பின் சாா்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை ஹெப்சி குணசீலி தலைமை வகித்தாா். நூல் வனத்தின் அமைப்பாளா் க.சரவணன் நூலகத்துக்கான புத்தகங்களை வழங்கினாா்.

சென்னையைச் சோ்ந்த சாதனா நூலகத்துக்கான புத்தகங்களை ஏற்பாடு செய்து தந்தாா். நூல்வனம் அமைப்பாளா் சரவணன் பேசும்போது, ‘சாதிக்க வயது தடையல்ல. நூல்கள் தன்னம்பிக்கை அளிப்பவை. இளம் வயதில் சாதித்தவா்களின் வரலாற்றை புத்தகங்கள் எடுத்துரைப்பவை. பாடப்புத்தகம் தாண்டிய நூலக வாசிப்பை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். கனவுகளை நிஜமாக்க புத்தகங்கள் உதவும் என்றாா் அவா். மாணவா் நிதா்சன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT