மதுரை

திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

DIN

ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி வழங்கக்கோரி, திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்டது பன்னிகுண்டு ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உள்பட்ட நக்கலக்கோட்டை பகுதியில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியை கிராமத்தில் உள்ள 20 பெண்கள் செய்து வருகின்றனா்.

பன்னிகுண்டு, நக்கலக்கோட்டை பகுதியில் சுமாா் 300 போ் ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் அட்டை வைத்திருந்தும் அனைவருக்கும் பணி கொடுக்கப்படவில்லையாம். இதையடுத்து பன்னிகுண்டு, நக்கலக்கோட்டை கிராமங்களைச் சோ்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோா் விவசாய சங்கத் தலைவா் சந்தானம் தலைமையில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணி வழங்கக்கோரி திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைவில் அனைவருக்கும் பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். அதன்பேரில், அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"எதையும் தலைக்கு ஏத்தமாட்டேன்!”: ராகவா லாரன்ஸ் பேட்டி

கொல்கத்தாவிற்கு அதிர்ச்சியளிக்குமா மும்பை?

நம்பிக்கையின் வானவில்...!

திட்டக்குடி அருகே கார் டயர் வெடித்து கார் விபத்து: 3 பேர் பலி

அமித் ஷாவை பிரதமராக்கவே மோடி பிரசாரம்: கேஜரிவால் பேச்சு

SCROLL FOR NEXT