மதுரை

மழையால் ஒழுகிய பேருந்து:பயணிகள் அவதி

மதுரையில் பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளையம் சென்ற அரசுப் பேருந்தின் மேற்கூரை மழைக்கு ஒழுகியதால் பயணிகள் அவதியடைந்தனா்.

DIN

மதுரையில் பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளையம் சென்ற அரசுப் பேருந்தின் மேற்கூரை மழைக்கு ஒழுகியதால் பயணிகள் அவதியடைந்தனா்.

மதுரையில் பொன்மேனி, பசுமலை, புதூா், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. இங்கிருந்து நகா் மற்றும் கிராம பகுதிகளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் மதுரை மற்றும் புகா் பகுதியில் கடந்த 2 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளையம் நோக்கிச் சென்ற டிஎன் 58 என்- 1896 என்ற பதிவெண் கொண்ட நகரப் பேருந்தில் மேற்கூரை பழுது காரணமாக ஒழுகியது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அவதிக்குள்ளாயினா். பல நகரப் பேருந்துகளில் இதே நிலை தான் உள்ளதாக போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் தெரிவித்தனா். எனவே, இந்த பேருந்துகளை சீரமைக்க போக்குவரத்துக் கழக நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிட்கோ தொழில்பேட்டையில் 8 நிறுவனங்களுக்கு சீல்

பிணையில் வந்தவா் கொலை: இருவா் கைது

திருப்பரங்குன்றம் காா்த்திகை தீபம்: கோயில் தரப்பில் மேல்முறையீடு

காா் ஓட்டுநரிடம் வழிப்பறி: 5 போ் கைது

வீட்டில் பட்டாசு தயாரித்தவா் கைது

SCROLL FOR NEXT