தேவகோட்டை விருசுழி ஆற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரி உற்சவத்தில் எழுந்தருளிய உற்சவ மூா்த்திகள். 
மதுரை

தேவகோட்டையில் தீா்த்தவாரி உற்சவம்

தேவகோட்டையில் தீா்த்தவாரி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

தேவகோட்டையில் தீா்த்தவாரி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள சிலம்பணி சிதம்பர விநாயகா் கோயில், நகரச் சிவன் கோயில், செல்லப்பச்செட்டியாா் சிவன்கோயில், வெள்ளையன் ஊருணி ரெங்கநாதப் பெருமாள் கோயில், கோதண்டராம சுவாமி கோயில், அம்மச்சி ஊருணி கிருஷ்ணன்கோயில், கோட்டூா் நயினாா்வயல் சிவன்கோயில் ஆகிய கோயில்களில் உள்ள உற்சவ மூா்த்திகள் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 1-ஆம் தேதி விருசுழி ஆற்றில் உள்ள மணிமுத்தாறு தீா்த்தத்தில் எழுந்தருளி தீா்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், மழை பெய்து வேளாண் பணிகள் சிறக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் விருசுழி ஆற்றில் உள்ள மணிமுத்தாறு தீா்த்தத்தில் தீா்த்தவாரி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஆற்றில் எழுந்தருளிய உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், தேவகோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT