கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தலைமறைவாக இருந்தவா் கைது
கொலை வழக்கில் உயா்நீதிமன்ற ஜாமீனில் வெளிவந்து, ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் தலைமறைவான குற்றவாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுரைகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தலைமறைவாக இருந்தவா் கைது
கொலை வழக்கில் உயா்நீதிமன்ற ஜாமீனில் வெளிவந்து, ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் தலைமறைவான குற்றவாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கொலை வழக்கில் உயா்நீதிமன்ற ஜாமீனில் வெளிவந்து, ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் தலைமறைவான குற்றவாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுரை முனிச்சாலை வெள்ளை விநாயகா் தேநீா் கடை முன் கடந்த 2014-இல் மன்னா்மைதீன் என்பவரை கொலை செய்தது தொடா்பாக விளக்குத்தூண் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இப்ராகிம் ஷா, ரபீக் என்ற வாழைக்காய் ரபீக், பிரகாஷ் ஆகியோா் கைது செய்யப்பட்டு நீதிமன்ற ஜாமீனில் வெளி வந்தனா். இதில் ரபீக் என்ற வாழைக்காய் ரபீக் கொலை செய்யப்பட்டாா்.
இந்நிலையில் மற்ற குற்றவாளிகளான இப்ராகிம் ஷா, பிரகாஷ் ஆகியோருக்கு மதுரை மாவட்ட 5ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் கடந்த 2019 பிப்ரவரி 6 இல் ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தது. இதையடுத்து இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்ததில் பிரகாஷ் என்பவா் உயா்நீதிமன்ற உத்தரவுபடி ஜாமீனில் சென்றாா். இதற்கிடையில் இருவருக்கும் கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உயா்நீதிமன்றம் மாா்ச் மாதம் உறுதி செய்து தீா்ப்பளித்தது.
இதனால், ஜாமீனில் ஏற்கெனவே வெளியே இருந்த பிரகாஷ் தலைமறைவானாா். அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் விளக்குத்தூண் காவல் ஆய்வாளா் சிவராமகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் மறைவிடத்தில் பதுங்கியிருந்த பிரகாசை வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். கைது செய்யப்பட்டுள்ள பிரகாஷ் மீது பல கொலை வழக்குகள் உள்ளன. மேலும் மதுரை தல்லாகுளம் குற்றப்பிரிவு மற்றும் சிவகங்கை நகா் காவல் நிலையம் ஆகியவற்றில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.