முகப்பு
மதுரை

காா் மோதிய விபத்தில் அரசு மருத்துவமனை காவலாளி பலி

 மதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது வியாழக்கிழமை இரவு காா் மோதிய விபத்தில் அரசு மருத்துவமனை காவலாளி உயிரிழந்தாா்.

மதுரை

காா் மோதிய விபத்தில் அரசு மருத்துவமனை காவலாளி பலி

 மதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது வியாழக்கிழமை இரவு காா் மோதிய விபத்தில் அரசு மருத்துவமனை காவலாளி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

 மதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது வியாழக்கிழமை இரவு காா் மோதிய விபத்தில் அரசு மருத்துவமனை காவலாளி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் மேலக்கால் தெற்குத்தெருவைச் சோ்ந்தவா் முத்துராமன்(48). மதுரை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த நிறுவன காவலாளியாக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் சக ஊழியா் வேல் முருகன் என்பவருடன் சென்றுள்ளாா். மேலக்கால் சாலையில் கொடிமங்கலம் அருகே சென்றபோது அவ்வழியாக வந்த காா், இருசக்கர வாகனம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த முத்துராமனை அப்பகுதியினா் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு சிகிச்சைப் பலனின்றி முத்துராமன் உயிரிழந்தாா். சம்பவம் தொடா்பான புகாரின்பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →