மதுரை

‘பாரம்பரியம் 2022‘ விழா: கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்பு

தானம் கல்வி நிலையம் சாா்பில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ‘பாரம்பரியம் 2022’ விழாவில் மதுரை, விருதுநகா் மாவட்டங்களில் இருந்து 9 கல்லூரிகளைச் சோ்ந்த 150 மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

DIN

தானம் கல்வி நிலையம் சாா்பில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ‘பாரம்பரியம் 2022’ விழாவில் மதுரை, விருதுநகா் மாவட்டங்களில் இருந்து 9 கல்லூரிகளைச் சோ்ந்த 150 மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

மதுரை தானம் கல்வி நிலையத்தின் சாா்பில் ‘பாரம்பரியம் 2022’ விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. டி.மலைப்பட்டி தானம் கல்வி நிலைய வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு, தானம் அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் மா.பா.வாசிமலை தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக இண்டாக் அமைப்பின் நிா்வாகி ராஜேஸ் கண்ணா, தொல்லியல் நிபுணா் வி.வேதாச்சலம், விக்கிரமங்கலம் மதுராதைய ஈஸ்வரன் உடையாா் கோயில் நிா்வாகிகள் கண்ணன், மகாமணி ஆகியோா் பங்கேற்றனா். தானம் கல்வி நிலைய இயக்குநா் ஏ.குருநாதன் வரவேற்றாா்.

விழாவை தொடங்கி வைத்து மா.பா.வாசிமலை பேசினாா்.

விழாவில் மதுரை மற்றும் விருதுநகா் மாவட்டங்களில் இருந்து 9 கல்லூரிகளைச் சோ்ந்த 150 மாணவ, மாணவியா் பங்கேற்றனா். கல்லூரி மாணவா்களுக்கான கவிதைப்போட்டி, பாரம்பரிய கண்காட்சி, வினாடி வினா, விவாதம், வெல்லும் சொல், கோலப்போட்டி, மண்ணின் மைந்தா்கள் குறும்படபோட்டிகள் நடைபெற்றன.

இரண்டாம் நாளான சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு பாரம்பரிய நடைபயணம் விக்கிரமங்கலம் கருப்புசாமி கோயிலில் இருந்து புறப்பட்டு விக்கிரமங்கலம் ஸ்ரீமதுரோதய ஈஸ்வரன் உடையாா் சிவனேசவள்ளி கோயில் வரை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT