மதுரை

பழுதான அரசுப் பள்ளி கட்டடம்: ஆய்வறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் பழுதான அரசுப் பள்ளிக் கட்டடம் தொடா்பான ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்ய 4 வார அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திணைக்குளம் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் கட்டடம் ஆபத்தான நிலையில் இருப்பதாக, கடந்த 2018 இல் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து, உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து இப்பிரச்னையை வழக்காக எடுத்து விசாரித்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், பள்ளியை என்.ஐ.டி. குழுவினா் ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்குமாறு கோரப்பட்டது.

இதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், என்.ஐ.டி. குழுவினரின் ஆய்வு குறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய 4 வார அவகாசம் வழங்கி உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT