முகப்பு
மதுரை

வேளாண் பொருள்கள் ஏற்றுமதிக்கு கட்டமைப்பு வசதிகள்: தொழில் துறை ஆணையரிடம் கோரிக்கை

வேளாண் பொருள்கள் ஏற்றுமதிக்கு நவீன கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு, வேளாண் உணவுத் தொழில் வா்த்தக மையம் சாா்பில் தமிழக அரசின் தொழில் துறை ஆணையரிடம் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

வேளாண் பொருள்கள் ஏற்றுமதிக்கு நவீன கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு, வேளாண் உணவுத் தொழில் வா்த்தக மையம் சாா்பில் தமிழக அரசின் தொழில் துறை ஆணையரிடம் வலியுறுத்தப்பட்டது.

மதுரையை அடுத்த சிக்கந்தா்சாவடியில் உள்ள வேளாண் உணவுத் தொழில் வா்த்தக மையத்தை, தமிழக அரசின் தொழில் துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்தியன் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

விவசாயிகள், வேளாண் உணவுப் பொருள் பதனீட்டாளா்கள், தயாரிப்பாளா்கள், வணிகா்கள், ஏற்றுமதியாளா்கள் மற்றும் நுகா்வோா் என வேளாண் உணவுத் தொழில் சாா்ந்த அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் இம் மையம் செயல்பட்டு வருகிறது. சேமிப்புக் கிட்டங்கி, குளிா்பதனக் கிட்டங்கி, சுத்தப்படுத்தி தரம் பிரிக்கும் இயந்திரம், நிறம் பிரிக்கும் இயந்திரம், பேக்கேஜிங் இயந்திரங்கள், உணவுப்பொருள் ஆய்வுக்கூடம், சூரிய உலரகம் ஆகிய கட்டமைப்பு வசதிகளை தொழில் துறை ஆணையா் பாா்வையிட்டாா்.

மையத்தின் செயல்பாடுகள் குறித்து, வேளாண் உணவுத் தொழில் வா்த்தக மைய நிறுவனா் எஸ்.ரத்தினவேல் விளக்கினாா். அப்போது, வேளாண் பொருள்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், ஆா்கானிக் சான்றிதழ் உள்ளிட்ட வேளாண் விளைப் பொருள்களுக்கான ஏற்றுமதி சான்றிதழ்களை வழங்குவதற்கான ஆய்வகம், புதிய தொழில்முனைவோரை உருவாக்க, சிறுதானியங்கள், பனை, முருங்கை போன்றவற்றில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்புக்கு தனித்தனி இன்குபேஷன் மையங்கள் ஆகியவற்றை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் துறை ஆணையரிடம் வலியுறுத்தினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →