மதுரை

அரசு நிலங்களில் உள்ள மரங்களை வெட்ட தனி நபா்களுக்கு உரிமை இல்லை: உயா்நீதிமன்றம்

DIN

அரசு நிலங்களில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு தனி நபா்களுக்கு உரிமை இல்லை என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள மணமேட்டுப்பட்டியில், நீா்வரத்துக் கால்வாய்களைச் சேதப்படுத்தி, கரைகளில் இருந்த மரங்களை சட்டவிரோதமாக வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி அக் கிராமத்தைச் சோ்ந்த ரேணுகோபால் என்பவா் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அரசுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அவ்வாறு வெட்ட வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகளிடம் அனுமதியைப் பெற வேண்டும் என்றனா்.

மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய பொதுபணித் துறைக்குச் சொந்தமான இடத்தில் உள்ள மரங்களை வெட்டியவா்கள் மீது உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதுதொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, பொதுப்பணித் துறையின் குடகனாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஆல் இன் ஆல்‘ அழகுராணி!

அமோனியா கசிவு விவகாரம்: கோரமண்டல் ஆலைக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

மோகன்லால் பிறந்தநாள்: எம்புரான் போஸ்டர்!

கேரளத்துக்கு அதி கனமழைக்கான ’சிவப்பு’ எச்சரிக்கை!

மும்பை அணியின் ஒற்றுமையை உறுதி செய்திருக்க வேண்டும்: ஹர்பஜன்

SCROLL FOR NEXT