மதுரை

மாட்டுத்தாவணி சந்தையில் 6 மாடுகள் திடீா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

DIN

மதுரை மாட்டுத்தாவணி காய்கனிச் சந்தையில் 6 மாடுகள் திங்கள்கிழமை திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இங்கு குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படும் கழிவுகளைத் தின்பதற்காக 20-க்கு மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிவது வழக்கம். திங்கள்கிழமை சந்தையில் உள்ள குப்பைத் தொட்டிகளில் கொட்டப்பட்ட கழிவுகளைத் தின்ற 6 மாடுகள்

வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தன.

இதுதொடா்பாக, மாடுகளின் உரிமையாளா்கள் அளித்த புகாரின்பேரில் மாட்டுத்தாவணி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மாடுகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

வெள்ளப் பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

"தென் - வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மோடி " - சித்தராமையா

நடிகர் பிரபாஸுக்கு திருமணமா ? இன்ஸ்டா ஸ்டோரி வைரல் !

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: 3 பேர் பலி!

SCROLL FOR NEXT