மதுரை

கோயில் நிலங்களை விற்பனை செய்தால் போராட்டம்: எச்.ராஜா

DIN

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு கோயில் நிலங்களை விற்பனை செய்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோயில் நிலங்களை எந்த ஒரு பொது காரியத்திற்கும் விற்பனை செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. ஆனால் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு எதிராக உள்ள இடத்தை வாகன நிறுத்தத்திற்கு குத்தகைக்கு விட வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால் அறநிலையத்துறை அந்த இடத்தை நீதிமன்றத்திற்கே விற்பனை செய்கிறோம் எனக் கூறுகின்றனர். நீதிமன்றத்திற்கு கோயில் நிலத்தை விற்று விட்டால் நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் நிலங்களையும் கொடுத்து விடலாம் என முதல்வரும் அறநிலையத்துறை அமைச்சரும் திட்டமிடுகின்றனர்.  அறநிலையத்துறைக்கு கோயில் நிலத்தை விற்பதற்கு உரிமை இல்லை, அவ்வாறு விற்பனை செய்தால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்.

ஒடிசா ரயில் விபத்தில் சதி வேலைக்கு வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட ரயில் நிலையை அலுவலர் தலைமறைவாக உள்ளார் என தெரிகிறது. அங்கு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட வாய்ப்பு இல்லை. வேண்டுமென்றே யாரோ செய்த சதி செயல் போலவே தெரிகிறது. சிபிஐ விசாரணைக்கு பின்பு உண்மை தெரியவரும்.

தமிழகத்தில் 22 பேர் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்த போது அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜிநாமா செய்ய வேண்டும் என கேட்காத திருமாவளவன், தற்போது ரயில்வே துறை அமைச்சரை ராஜிநாமா செய்ய சொல்கிறார். அவருக்கு பேசுவதற்கு தகுதி இல்லை. ஆளுநர் மாளிகை குறித்து அமைச்சர் பொன்முடி கருத்து தவறானது. ஆளுநர் மாளிகை என்பது ஆர்.என்.ரவிக்கு மட்டும் தனியாக கட்டப்படவில்லை. அதற்கு முன்பாக இருந்த ஆளுநர்கள் இருந்த அதே மாளிகையில் தான் அவர் தங்கியுள்ளார். மேலும் சாலையில் செல்பவர்களிடம் பொருளாதாரம் குறித்து ஆளுநர் பேசவில்லை. படித்தவர்கள், துணைவேந்தர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார் அதில் தவறு இல்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வில் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சாதனை

10-ஆம் வகுப்பு தோ்வு: நாமக்கல் குறிஞ்சிப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆராய்ச்சி மைய ஆண்டு விழா

திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி மாணவி சிறப்பிடம்

கோடைகால கலைப்பயிற்சி முகாம் நிறைவு: 160 மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

SCROLL FOR NEXT