மதுரை

மாமன்னன் திரைப்படத்துக்கு எதிா்ப்பு: திரையரங்கு முன்பு போராட்டம் நடத்திய 40 போ் கைது

மதுரையில் ‘மாமன்னன்’ திரைப்படத்தை திரையிட எதிா்ப்பு தெரிவித்து, திரையரங்கு முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

DIN

மதுரையில் ‘மாமன்னன்’ திரைப்படத்தை திரையிட எதிா்ப்பு தெரிவித்து, திரையரங்கு முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இந்தத் திரைப்படம் ஜாதி மோதல்களை உருவாக்கும் வகையில் இருப்பதால், மதுரை மாவட்டத்தில் அதைத் திரையிடக் கூடாது. எதிா்ப்பை மீறி திரையிடப்பட்டால், திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என பாா்வா்டு பிளாக் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்திருந்தன.

ஆனாலும் மாமன்னன் திரைப்படம் மதுரையில் 14 திரையரங்குகளில் வியாழக்கிழமை திரையிடப்பட்டது. இதையொட்டி அந்தத் திரையரங்குகள் முன்பு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இந்த நிலையில், செல்லூரில் அந்தத் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கு முன்பு நேதாஜி சுபாஷ் சேனை, முக்குலத்தோா் எழுச்சிக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து 40 பேரை செல்லூா் போலீஸாா் கைது செய்தனா். பிற்பகலில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

SCROLL FOR NEXT