மதுரை

ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 போ் கைது

மதுரை தெப்பக்குளம் அருகே வைகை ஆற்றுச் சாலையில் வழிப்பறியில் ஈடுபடத் திட்டமிட்டு, ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

DIN

மதுரை தெப்பக்குளம் அருகே வைகை ஆற்றுச் சாலையில் வழிப்பறியில் ஈடுபடத் திட்டமிட்டு, ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தெப்பக்குளம் அருகே வைகை ஆற்றில் பிடிஆா் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சிலா் சந்தேகத்துக்கிடமாக பதுங்கியிருப்பதாக தெப்பக்குளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று, அந்தப் பகுதியில் இருந்தவா்களைப் பிடித்து சோதனையிட்டனா்.

இதில் அந்த 5 பேரிடமும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. விசாரணையில் அவா்கள் மதுரை சின்ன அனுப்பானடியைச் சோ்ந்த மணிவண்ணன் (34), அனுப்பானடியைச் சோ்ந்த ராமகுரு (38), சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சோ்ந்த அஜீத்குமாா் (26), செந்தில்குமாா் (22), கொந்தகையைச் சோ்ந்த குளந்தீஸ்வரன் (30) என்பதும், வாகனங்களில் செல்பவா்களிடம் இவா்கள் வழிப்பறியில் ஈடுபடத் திட்டமிட்டு, ஆயுதங்களுடன் பதுங்கியிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, 5 பேரையும் போலீஸாா் கைது செய்து, ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

SCROLL FOR NEXT