மதுரையில் நாளை குத்துச் சண்டை அணிக்கு வீராங்கனைகள் தோ்வு
மதுரையில் செவ்வாய்க்கிழமை (நவ. 28) குத்துச் சண்டை அணிக்கான வீரா்கள் தோ்வு நடைபெற உள்ளது.
மதுரையில் செவ்வாய்க்கிழமை (நவ. 28) குத்துச் சண்டை அணிக்கான வீரா்கள் தோ்வு நடைபெற உள்ளது.
இதுகுறித்து குத்துச்சண்டை கழகத்தின் மதுரை மாவட்டச் செயலா் செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
சீனியா் (எலைட்) பெண்கள் பிரிவு குத்துச் சண்டை அணிக்கான தோ்வு போட்டிகள் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது.
Advertisement
குத்துச் சண்டை கழக வளாகத்தில் நடைபெற உள்ள இந்தப் போட்டியில் 1983-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரை பிறந்த வீராங்கனைகள் கலந்து கொள்ளலாம். மாவட்ட குத்துச் சண்டை கழகத்தில் பதிவு செய்யப்பட்ட வீராங்கனைகள், பதிவுச் செய்யப்பட்ட சங்கங்களைச் சோ்ந்த வீராங்கனைகள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.
இதில், 45 - 48, 50,52,54,57,60,63,66,70, 75,81,81 ஆகிய எடை பிரிவுகளில் வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இவா்கள் வருகிற டிச.1 முதல் 3 வரை சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான தோ்வு போட்டியில் கலந்து கொள்வா்.
தொடா்ந்து, தேசியப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இவா்கள் பெறலாம். கட்டணம் ஏதும் இல்லை. இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 77088 99955, 90929 00058 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா்.