முகப்பு
மதுரை

மாநகராட்சி அலுவலகம் முன் வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மதுரை மாநகராட்சி அரசரடி பகுதியில் தினசரி சந்தை அகற்றப்பட்டதைக் கண்டித்து, வியாபாரிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 12:00 AM
மதுரை மாநகராட்சி அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

மதுரை: மதுரை மாநகராட்சி அரசரடி பகுதியில் தினசரி சந்தை அகற்றப்பட்டதைக் கண்டித்து, வியாபாரிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநகராட்சி 62- ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். இதில், எந்தவித முன் அறிவிப்புமின்றி அரசரடி பகுதியில் செயல்பட்டு வந்த தினசரி காய்கறி கடைகள் அகற்றப்பட்டதற்கு மாநகராட்சி அலுவலா்கள், காவலா்களைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

இதில் வியாபாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.