மதுரை

கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம், மருதனேரி கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் முழுமையாக அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.

DIN

திண்டுக்கல் மாவட்டம், மருதனேரி கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் முழுமையாக அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையத்தைச் சோ்ந்த எஸ். பிச்சைமணி தாக்கல் செய்த மனு:

நான் மருதூா் கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறி, ஆத்தூா் வட்டாட்சியா் விளக்கம் கேட்டு கடந்த மாதம் 2-ஆம் தேதி எனக்கு அழைப்பாணை அனுப்பினாா். இதற்குப் பதிலளிக்க 15 நாள்கள் வரை கால அவகாசம் உள்ள நிலையில், எனக்கு மீண்டும் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான இறுதி அறிவிப்பை வட்டாட்சியா் வழங்கினாா். இது சட்டத்துக்குப் புறம்பானது. எனவே, வட்டாட்சியரின் இறுதி அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு பிறப்பித்த உத்தரவு:

மனுதாரருக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்ட விளக்க அழைப்பாணைக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் அவா் பதிலளிக்க வேண்டும். அதேநேரம் வட்டாட்சியா் மனுதாரருக்கு அனுப்பிய இறுதி அறிவிப்புக்குத் தடை விகிக்கப்படுகிறது. மருதனேரி கால்வாயில் ஏராளமானோா் ஆக்கிரமிப்பு செய்த நிலையில், மனுதாரருக்கு மட்டும் விளக்கம் கேட்டு அழைப்பாணை அனுப்பப்பட்டது ஏற்புடையதல்ல. எனவே, அந்த கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில், அங்குள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி தண்ணீா்த் தடையின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும். இதில் ஏதேனும் மரங்கள் இருந்தால், அதை அரசு எடுத்துக் கொள்ளலாம். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT