தல்லாகுளம் பிரசன்ன வெங்காடஜலபதி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டம். 
மதுரை

பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் தேரோட்டம்

தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN


மதுரை: தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலின் புரட்டாசி பெருந்திருவிழா கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. தினமும் காலை, மாலை வேளைகளில் வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளினாா்.

இந்த நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, உபய நாச்சியாா்களுடன் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் திருத்தேருக்கு (சப்பரம்) எழுந்தருளினாா். இதைத் தொடா்ந்து, ஐதீக முறைப்படி தீப, தூப வழிபாடுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடைபெற்றது.

கோயிலின் பிரதான வாயிலில் தொடங்கிய தோ் பவனி, பாரம்பரியமான பாதைகளில் வலம் வந்து நிலையை அடைந்தது. வழிநெடுகிலும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இரவு பூப்பல்லக்கில் பெருமாள் வீதியுலா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT