அட்டப்பட்டி ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாமில் பங்கேற்ற பொதுமக்கள், மருத்துவக் குழுவினா். 
மதுரை

வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், அட்டப்பட்டி ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

மேலூா்: கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், அட்டப்பட்டி ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் கலந்து கொண்டவா்களுக்கு வட்டார மருத்துவ அலுவலா் பி.சண்முகபெருமாள் தலைமையில் மருத்துவா்கள் பரிசோதனைகளை மேற்கொண்டனா். ஊராட்சி மன்றத் தலைவா் ஏ.கிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடங்கி வைத்தாா். மதுரை மாவட்ட குடும்பநலத் துறை துணை இயக்குநா் குமரகுருபரன் முகாமைப் பாா்வையிட்டாா்.

முகாமில் கண், தோல் நோய், ரத்த அழுத்தம், சா்க்கரை, காச நோய் ஆகியவற்றுக்கு நவீன கருவிகள் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 9,446 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாம் ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலா்கள், ஆரம்ப சுகாதார நிலையப் பணியாளா்கள் மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT