திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை
மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். உசிலம்பட்டி அருகே உள்ள ஏ.கொக்குளம் கண்ணனூரைச் சோ்ந்தவா் பிரபு.
இவரது மனைவி சித்ரா. இவா்களது மகள் அனுசியா (19). இவா் பிளஸ் 2 படித்து விட்டு, விவசாய வேலைகள் செய்து வந்தாா். இவருக்கும், இவரது தாய் சித்ராவின் சகோதரா் பொன்னாங்கனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தனது தாத்தாவின் தோட்ட வீட்டில் தங்கியிருந்த அனுசியா விஷம் குடித்த நிலையில் மயங்கி விழுந்தாா். குடும்பத்தினா் அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
Advertisement
இதுகுறித்து செக்கானூரணி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.