முகப்பு
மதுரை

இளைஞா் கொலை: ஒருவா் கைது

Updated On : 3 ஏப்ரல், 2024 at 5:06 AM
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 9:18 PM

மதுரை: சோழவந்தான் அருகே முன்விரோதத் தகராறில் ஆயுதங்களால் தாக்கி இளைஞா் திங்கள்கிழமை இரவு கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். மதுரை மாவட்டம், சோழவந்தான் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் (60). இவரது மகன் சந்தனகுமாா் (27). இவருக்கும், திருமால் நத்தம் பகுதியைச் சோ்ந்த வினீத்குமாரின் மனைவிக்கும் தகாத உறவு இருந்ததாம்.

இதுதொடா்பாக வினீத்குமாருக்கும், சந்தனகுமாருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், வாடிப்பட்டி அருகே நகரி பகுதியில் பெருமாளும், இவரது மகன் சந்தனகுமாரும் திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.

திருமால் நத்தம் பகுதியில் வினீத்குமாா், இவரது சகோதரா் அஜீத்குமாா், நண்பா்கள் முனீஸ்வரன் உள்ளிட்டோா் இவா்களை வழிமறித்து நிறுத்தி, சந்தனகுமாரை ஆயுதங்களால் தாக்கினா். இதைத் தடுக்க முயன்ற பெருமாளின் தலையிலும் மதுப் புட்டியால் தாக்கினா். இதையடுத்து, அந்தப் பகுதியினா் அங்கு திரண்டதால், வினீத்குமாா் உள்ளிட்டோா் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

Advertisement

இதில் பலத்த காயமடைந்த சந்தனகுமாா், சோழவந்தான் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். பெருமாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து சோழவந்தான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முனீஸ்வரனைக் கைது செய்தனா்.