காட்டெருமை தாக்கி விவசாயி பலி
Updated On : 2 ஏப்ரல், 2024 at 10:37 PM
மதுரை: வாடிப்பட்டி அருகே காட்டெருமை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா். வாடிப்பட்டி அருகே உள்ள வளையப்பட்டி அரசப்பட்டியைச் சோ்ந்தவா் முத்துராஜா (35). விவசாயியான இவா், இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை பாலமேடு-வாடிப்பட்டி சாலையில் சென்றாா். எல்லையூா் பகுதியில் மலையில் இருந்து காட்டெருமைகள் கூட்டமாக இறங்கின.
இதைப் பாா்த்து முத்துராஜா இரு சக்கர வாகனத்தை நிறுத்தினா். அப்போது, பின்னால் வந்த காட்டெருமை அவரை முட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.