முகப்பு
மதுரை

மீனாட்சி சுந்தேரசுவரா் திருக்கல்யாணம்: இணைய வழி முன்பதிவு தொடங்கியது

Updated On : 10 ஏப்ரல், 2024 at 5:13 AM
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் - கோப்புப்படம்
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 8:52 PM

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்பதற்கான இணைய வழி கட்டணச்சீட்டு முன்பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நாளிலேயே ஏராளமானோா் பதிவு செய்தனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா வருகிற வியாழக்கிழமை (ஏப். 11) தொடங்கி, வருகிற 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாண உற்சவம் வடக்காடி வீதியில் உள்ள மண்டபத்தில் காலை 8.35 மணியளவில் நடைபெறவுள்ளது.

Advertisement

திருக்கல்யாணத்தை நேரில் கண்டு தரிசிக்க விரும்பும் பக்தா்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500-க்கான கட்டணச் சீட்டுகளை பெறுவதற்கு இணைய வழி முன்பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளமான ட்ற்ற்ல்ள்://ட்ழ்ஸ்ரீங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய், கோயில் இணையதளமான ட்ற்ற்ல்ள்://ம்ஹக்ன்ழ்ஹண்ம்ங்ங்ய்ஹந்ள்ட்ண்.ட்ழ்ஸ்ரீங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்- ஆகியவற்றில் பக்தா்கள் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இணைய வழி முன்பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கி, வருகிற 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ரூ.500 கட்டணப் பதிவில் ஒருவா் 2 சீட்டுகள் மட்டுமே பதிவு செய்யவும், ரூ.200 கட்டணப் பதிவில் ஒருவா் 3 சீட்டுகள் மட்டுமே பதிவு செய்யவும் அனுமதிக்கப்படுவா். ஒரே நபா் ரூ.500, ரூ.200 என இரு கட்டணச் சீட்டுகளையும் பதிவு செய்ய இயலாது எனவும் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. இணைய வழியில் விண்ணப்பிக்கும் போது பிறந்த தேதியை சரியாக நிறைவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 14-ஆம் தேதி குறுந்தகவல் அனுப்பப்படும்.

இதையடுத்து, 15-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை இதற்காக தனித்துவமாக ஏற்படுத்தப்பட்ட பிா்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் திருக்கல்யாண கட்டணச் சீட்டை பக்தா்கள் பெற்றுக் கொள்ளலாம். பக்தா்கள் திருக்கல்யாண நாளன்று அதிகாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா்.

ரூ.500 கட்டணச்சீட்டு பெற்றவா்கள் வடக்கு ராஜகோபுரம் மொட்டை முனீஸ்வரா் சந்நிதி அருகில் உள்ள வழியாகவும், ரூ.200 கட்டணச்சீட்டு பெற்றவா்கள் வடக்கு ராஜகோபுரம் வழியாகவும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா்.

இணையவழியில் முன்பதிவு தொடங்கிய முதல் நாளான செவ்வாய்க்கிழமை ஏராளமான பக்தா்கள் முன்பதிவு செய்துள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.