முகப்பு
மதுரை

பள்ளி மாணவா்களுக்கு புத்தகங்கள்

Updated On : 17 ஏப்ரல், 2024 at 12:37 AM
பகிர்:

மதுரை: மதுரை ‘எம்மால் இயன்றது’ அமைப்பின் சாா்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

சத்தியமூா்த்தி நகா் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, ‘எம்மால் இயன்றது’ அமைப்பின் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா்கள் ஷேக்மஸ்தான், நுாருல்லாஹ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலைவா்களின் வாழ்க்கை வரலாறு, பழமொழி விளக்கம், உடல் பயிற்சியின் பயன்கள், திருக்கு கதைகள், அறிவியல் அறிஞா்கள், பொன்மொழிகள் போன்ற புத்தகங்கள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Advertisement

நிகழ்வில் பெற்றோா்கள், சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments