மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தற்கொலை
மதுரையில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை ஊமச்சிகுளம் ஸ்ரீதேவிநகா் விரிவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் மணவாளன் (52). இவரது மனைவி சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டாா். இவரது மகள் விருதுநகரில் உள்ள கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறாா்.
இந்த நிலையில், மனைவி இறந்த துக்கத்தில் இருந்த மணவாளன் அவரது வீட்டில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Advertisement
இதுகுறித்து ஊமச்சிகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.