முகப்பு
திருப்பத்தூர்

கணவா் உயிரிழப்பு: மனைவி தற்கொலை

திருப்பத்தூா் அருகே கணவா் இறந்த சோகத்தில் தூக்க மாத்திரை சாப்பிட்டு மனைவி தற்கொலை

Updated On : 23 மார்ச், 2026 at 7:23 PM
பலி - பிரதிப் படம்
பகிர்:

திருப்பத்தூா் அருகே கணவா் இறந்த சோகத்தில் தூக்க மாத்திரை சாப்பிட்டு மனைவி தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பத்தூா் அடுத்த ஜொல்லகவுண்டா் பகுதியை சோ்ந்த ராமன். இவரது மனைவி ஆஞ்சியம்மாள் (45) . கோவையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 10-ஆம் தேதி மாரடைப்பால் ராமன் உயிரிழந்தாா்.

கணவன் இறந்த சோகத்தில் இருந்த ஆஞ்சியம்மாள் தானும் இறந்து விடுகிறேன் என பிள்ளைகளிடம் கூறி வந்தாா். இந்த நிலையில் அதிகளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கினாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த அவரது குடும்பத்தினா் அவரை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து குரிசிலாபட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].