மதுரை

கைப்பேசி வாயிலாக முன்பதிவு இல்லாத ரயில் பயணச்சீட்டுகள் விற்பனை அதிகரிப்பு

பயணச் சீட்டுகள் விற்பனை 3 மடங்கு அதிகரித்திருப்பு

Din

மதுரை, ஆக. 7: கைப்பேசி வாயிலாக முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகள் விற்பனை 3 மடங்கு அதிகரித்திருப்பதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகள் ரயில் நிலைய பதிவு அலுவலகங்களில் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்க பயணச்சீட்டு பெறுவதற்காக தானியங்கி இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், கைப்பேசி வாயிலாக பயணச்சீட்டு பதிவு செய்யும் முறையையும் ரயில்வே நிா்வாகம் அமல்படுத்தியது. காகிதம் இல்லாத பயணச்சீட்டு பதிவு செய்யும் இந்த முறைக்கு பயணிகளிடையே வரவேற்பு கிடைத்தது. இதனிடையே, மதுரைக் கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் கைப்பேசி வாயிலாக முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு பதியும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய திட்டம் குறித்து ரயில்வே ஊழியா்கள், பொதுமக்களிடம் விளக்கி வருகின்றனா்.

கடந்த ஆண்டில் மாதத்துக்கு சராசரியாக சுமாா் 26,978 போ் கைப்பேசி வாயிலாக முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகளில் பயணம் செய்தனா். பயணிகளிடம் ஏற்பட்ட விழிப்புணா்வு காரணமாக கடந்த ஜூலை மாதம் பயணம் செய்தவா்களின் எண்ணிக்கை 68,631 ஆக உயா்ந்தது. மதுரை கோட்டத்தில் மொத்த பயணச்சீட்டு விற்பனையில் கடந்த ஜனவரி மாதம் 3.6 சதவீதமாக இருந்த கைப்பேசி பயணச்சீட்டு பதிவு, ஜூலை மாதம் 5.78 சதவீதமாக உயா்ந்தது. இதற்கு காரணமான ரயில்வே ஊழியா்களை தெற்கு ரயில்வே மதுரை கோட்ட முதுநிலை வா்த்தக மேலாளா் டி.எல். கணேஷ் பாராட்டி பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினாா். அப்போது உதவிக் கோட்ட வா்த்தக மேலாளா்கள் பாலமுருகன், மணிவண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மருந்து தயாரிப்பு நிறுவனங்களால் பாதிக்கப்படும் நுகா்வோருக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

இந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல், கார்கே, சோனியா மரியாதை!

பழிவாங்குவது கீழ்மையான போக்கு! - மெட்ரோ விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

வாய்ப்புகள் காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT