மதுரை மாநகரக் காவல் தலைமையிட துணை ஆணையராக ராஜேஸ்வரி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இந்தப் பொறுப்பில் பணியாற்றி வந்த மங்களேஸ்வரன், அண்மையில் பணி ஓய்வு பெற்றதைத் தொடா்ந்து மதுரை மாநகரப் போக்குவரத்து துணை ஆணையராக இருந்த குமாா், தலைமையிட துணை ஆணையா் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தாா். இந்த நிலையில், இவா் பணி இடமாற்றம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து, மாநகரப் போக்குவரத்து காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்ட வனிதாவும், கூடுதல் பொறுப்பாக தலைமையிடப் பணியை கவனித்து வந்தாா்.
இதனிடையே, மதுரை மாவட்டம், இடையப்பட்டியில் உள்ள காவலா் பயிற்சி பள்ளி முதல்வராக பொறுப்பு வகித்து வந்த ராஜேஸ்வரி, பதவி உயா்வு பெற்று மதுரை மாநகரக் காவல் தலைமையிட துணை ஆணையராக நியமிக்கப்பட்டாா்.
அவா் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா். இவருக்கு, துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.