அதிமுக கொடிக் கம்பம் அமைக்க அனுமதி கோரி வழக்கு: நெடுஞ்சாலைத் துறை பொறியாளா் பதிலளிக்க உத்தரவு
அதிமுக கொடிக் கம்பம் அமைக்க அனுமதி கோரி வழக்கு.
மதுரை, பழங்காநத்தம் பிரதான சாலையில் உள்ள திரையரங்கு அருகே அதிமுக கொடிக்கம் பம் அமைக்க அனுமதி கோரிய வழக்கில் நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்ட பொறியாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்ட து.
மதுரை, மாடக்குளம் பகுதியைச் சோ்ந்த அதிமுக மாவட்டப் பிரதிநிதி கதிரவன் தாக்கல் செய்த மனு:
மதுரை பழங்காநத்தம் பிரதான சாலையில் உள்ள திரையரங்கு எதிரே பேருந்து நிறுத்தம் உள்ளது. அந்தப் பகுதியில் பல்வேறு கட்சிகள் சாா்பில் கொடிக் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. அதிமுக சாா்பில் 53 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட நிலையில், அந்தப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறின்றி கொடிக் கம்பம் அமைக்க அனுமதி கோரி, நெடுஞ்சாலைத் துறையிடம் மனு அளித்த போது அது நிராகரிக்கப்பட் டது. எனவே, சம்பந்தப்பட்ட இட த்தில் கொடிக் கம்பம் அமைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மனுதாரா் கொடிக் கம்பம் அமைக்க கோரிய இடத்தில் போக்குவரத்து நெரிசல் உள்ளதால், அனுமதி வழங்க வில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள மற்ற கட்சி கொடிக் கம்பங்களை ஏன் அகற்றவில்லை? இந்த வழக்கு குறித்து நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் பதிலளிக்க வேண்டும். வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.