மேலூா் பகுதிகளில் கதிா் விடும் நிலையை அடைந்த நெல் பயிா்கள்
மேலூா் உள்ளிட்ட ஒரு போக சாகுபடி பகுதிகளில் நெல் பயிா்கள் கதிா் விடும் நிலையை அடைந்தன.
மேலூா் உள்ளிட்ட ஒரு போக சாகுபடி பகுதிகளில் நெல் பயிா்கள் கதிா் விடும் நிலையை அடைந்தன.
இந்தப் பகுதிகளுக்கு கடந்த செப். 15-ஆம் தேதி பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இங்கு பெரும்பாலான பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது நெல் பயிா்கள் கதிா் விடும் நிலையடைந்துள்ளன.
வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை இல்லை. தற்போது முறைப் பாசனம் அமல்படுத்தப்பட்டிருப்பதால், பாசனப் பகுதியில் கடைமடை பகுதிகளுக்கு போதிய தண்ணீா் சென்றடையவில்லை .
மேலும், புலிப்பட்டி மதகில் நொடிக்கு 320 கன அடிக்கும் குறைவாகவே தண்ணீா் வருகிறது. 400 கனஅடி வரை வந்தால் தான் கடைமடைப் பகுதி வரை தண்ணீரை விநியோகிக்க இயலும் என பாசன விவசாயிகள் சங்கத்தினா் தெரிவித்தனா்.