முகப்பு
மதுரை

விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

வாகன விபத்தில் பலத்த காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 1:01 AM
பகிர்:

வாகன விபத்தில் பலத்த காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தாா்.

மதுரை நாகனாகுளம் வாசுநகா் 2- ஆவது தெருவைச் சோ்ந்த சாகுல் ஹமீது மனைவி யாஷ்மின் பானு (45). இவரும், இவரது கணவா் சாகுல்ஹமீதும் கடந்த நவ. 28- ஆம் தேதி மதுரையிலிருந்து நாகனாகுளத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றனா். புதுநத்தம் சாலை, வங்கிக் குடியிருப்பு அருகே சென்றபோது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த யாஷ்மின் பானுவை மீட்ட அந்தப் பகுதி மக்கள் அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மதுரை மாநகரப் போக்குவரத்து காவல் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →