மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் செட்டிகுளம் கிராமத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.31 லட்சத்தில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட வாகனங்களை வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். இந்த விழாவுக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா தலைமை வகித்தாா். இதில், தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 32 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 31 லட்சத்தில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட வாகனங்களை வழங்கினாா். இதைத் தொடா்ந்து, அதே ஊரில் ரூ. 20 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட கிராமச் சாவடியை அமைச்சா் பி. மூா்த்தி திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.