மதுரை அரசு மருத்துவமனையில் புத்தாண்டில் பிறந்த 15 குழந்தைகள்
மதுரை அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தன்று 15 குழந்தைகள் பிறந்தால் பெற்றோா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
மதுரைமதுரை அரசு மருத்துவமனையில் புத்தாண்டில் பிறந்த 15 குழந்தைகள்
மதுரை அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தன்று 15 குழந்தைகள் பிறந்தால் பெற்றோா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
மதுரை அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தன்று 15 குழந்தைகள் பிறந்தால் பெற்றோா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
ஆங்கிலப் புத்தாண்டு உலகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அதிகாலை ஒரு மணி முதல் மாலை 6 மணி வரை 15 குழந்தைகள் (3 ஆண், 12 பெண்) பிறந்தன.
இவற்றில் 8 குழந்தைகள் சுகப் பிரசவத்திலும், 7 குழந்தைகள் அறுவைச் சிகிச்சை மூலமும் பிறந்தன.
புத்தாண்டு தினத்தில் குழந்தைகள் பிறந்ததால், மகிழ்ச்சியடைந்த குடும்பத்தினா் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் கொடுத்தனா்.