உசிலம்பட்டி அருகே விபத்தில் விவசாயி உயிரிழப்பு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலப்பட்டி பூச்சிபட்டியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (66). விவசாயியான இவா் உசிலம்பட்டி-தேனி சாலையில் உள்ள தனியாா் மண்டபம் முன்பு ஞாயிற்றுக்கிழமை இரவு நின்றிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம், தங்கராஜ் மீது மோதியதுடன், அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காா் மீதும் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த தங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்தில் சிக்கிய இரு சக்கர வாகனத்தில் வந்த ராஜேஸ்வரன், அஜய் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். இதுகுறித்து உசிலம்பட்டி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.